சாகித்திய விருது பெற்ற பிரிந்தா புஷ்பாகரனின் “மழலைச் சத்தம்”

கே.எஸ். கிலசன்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழா 2025 இல் எழுத்தாளர் பிரிந்தா புஸ்பாகரன் எழுதிய “மழலைச் சத்தம்” சிறுவர் இலக்கிய நூலுக்கான சாகித்திய விருதினை பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் மேரிபெர்ணத் நேசராசா தம்பதிகளின் இரண்டாம் மகளாக பிறந்த பிரிந்தா
அவர்கள் “என் மன வானில்” எனும் நூலினை 2006 இல் தனது 19ஆவது வயதில் கன்னிப் படைப்பாக வெளியிட்டார்.

ஆசிரியையாக பணி புரியும் இவரது தொடர் முயற்சியால் இரட்டை நோபல் உலகசாதனை புரியவும் மேலும் பல படைப்புகளை உருவாக்கவும் கவிசார் நுட்பங்களை மேம்படுத்தவும் தன்னை வளர்த்துக் கொண்டவர் “மன ஆழியின் முத்துக்கள்” எனும் வலைத்தள E-book ஐயும் வெளியீடு செய்தமைக்காகவும் சாதனைப் பெண்களுக்கான WOMEN ICON OUTSTANDING WRITER AWARD” 2024 எனும் விருதினை தன்வசமாக்கினார். “சிட்டுக்களின் மெட்டுக்கள்” படைப்பின் மூலம் “கவித்தேன் தூளி” எனும் கவிதைத் தொகுப்பு நூலிலும் இடம்பிடித்தார். “மழலைச் சத்தம்” எனும் 133 பாடல்கள் அடங்கிய சிறுவர் பாடல் நூலையும் வெளியிட்டார் இந்த நூலே கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சிறந்த சிறுவர் இலக்கிய நூலாக தெரிவானது.