( வி.ரி.சகாதேவராஜா)

 அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை -01 கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்  அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

 சொறிக்கல்முனை கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டு யானை வீட்டை உடைத்து  உணவுக்கு வைத்திருந்த நெல்லையும் உறிஞ்சி சேதமாக்கியுள்ளது.

 சம்பவ இடத்திற்கு நேற்று காலை   ஞாயிற்று கிழமை பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் மற்றும்  பிரதேச சபை உறுப்பினர் ஜூஜின் மோஸஸ்  பார்வையிட்டனர்.

 இதனை தொடர்ந்து வனவிலங்கு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் எடுக்க பணிப்புரை விடுத்தார்.

அறுவடை காலங்கள் நிறைவடைந்த பின்னர் கிட்டங்கி வாவியை அண்டிய நாணல் பகுதிகளில் பகல் வேளையில் கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் இரவு வேளைகளில் அண்மை கிராமங்களான வீரச்சோலை ,வீரமுனை சொறிக்கல்முனை ,சம்மாந்துறை கிராமங்களில் புகுந்து உடமைகளையும் ,உயிர் சேதங்களையும் அடிக்கடி ஏற்படுத்தி வருவதாகவும் இரவு வேளைகளில் அச்சத்துடனே கிராம மக்கள் உள்ளதாக நாவிதன்வெளி பிரதேச சபை  தவிசாளர் குற்றம் சாட்டியுள்ளார் .