மண்டூர் மண்ணுக்கு மேலும் பெருமை சேர்த்த. திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன். மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளராக பொறுப்பேற்று இருக்கின்றார்.

இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் (B.SC) பட்டம் பெற்று மண்டூர் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராக முதல் நியமனத்தினை பெற்றவர்.

அதன் பின்னர் இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தி அடைந்து மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகம், கல்குடா வலயக் கல்வி அலுவலகம்,
மட்டக்ககளப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகங்களில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி தனது அர்ப்பணிப்பான சேவையினை வழங்கியவர்.

கல்விப் பின்புலத்தில் வளர்ந்த சிவசங்கரி அவர்கள் இன்றைய (13/10/2025) ஆம் திகதி மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்வி பணிப்பாளராக தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

மட்டு மாவட்டத்தில் பல வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் யோ. ஜெயசந்திரன் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து இவர் பணி தொடர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவர் மண்டூர் கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளையின் புதல்வியும் கவிஞர் மண்டூர் தேசிகனின் சகோதரியும் ஆவார்.