அரச இலக்கிய விருது விழாவில் பாடகர் சபேசனுக்கு இளங்கலைஞர் விருது.
-கே.எஸ். கிலசன்-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் திருக்கோவில் விநாயபுரத்தை சேர்ந்த சுகிர்தராஜா சபேசனுக்கு ஆற்றுகை கலைக்காக இளங்கலைஞர் விருது வழங்கிவைக்கப்பட்டது.
தற்போது தென்னிந்தியாவில் சரிகமப மேடையில் பாடகராக தன்னை பட்டைதீட்டி வருகையில் அவரது சார்பில் அவருடைய பெற்றோரான சுகிர்தராஜா ஜெயந்தி தம்பதிகள் விருதினை பெற்றுக்கொண்டனர்.
இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் இளங்கலைஞர் சபேசன் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவதற்கும் கல்முனை நெற் ஊடகத்தின் வாழ்த்துகள்.