இலக்கிய விருது விழாவில் பாடகர் P.K சேகருக்கு வித்தகர் விருது
கே.எஸ். கிலசன்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இலக்கிய விருது விழாவில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பொன்னம்பலம் குலசேகரம் அவர்கள் ஆற்றுகை கலைக்காக வித்தகர் விருதினை பெற்றுக்கொண்டார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் தனது பங்களிப்பை வழங்கி வரும் இவர் ஆரம்பத்தில் கல்முனை சிவா இசைக்குழுவில் முக்கிய பாடகராக வலம் வந்தவர். பின்னாளில் சாகரம் இசைக்குழுவை வழிநடாத்திச் செல்லும் தலைவராக பயணிக்க ஆரம்பித்தவர் தற்போதும் இலைமறை காயாக மறைந்துள்ள இளம் பாடகர்களை இனங்கண்டு தனது இசைக்குழுவில் பாடுவதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறார். தன்னுடைய இசைத்துறைக்கான பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் வித்தகர் விருது இவருக்கு கிடைத்தமைக்காக கல்முனை நெற் ஊடகத்தின் வாழ்த்துக