இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் முதல் முறை என்று பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கூறுகியுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ்மா அதிபர், கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் தற்போது இன்டர்போலால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸாரின் ஒருங்கிணைப்பு மற்றும் இன்டர்போலின் உதவியுடன் இந்தோனேசிய பொலிஸார் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இந்த நாட்டில் அரசியல் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்ட வரலாறு இருப்பதாகவும், தற்போது அந்த சூழல் மாறிவிட்டதாகவும், குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் பிரியந்த வீரசூரிய விளக்கமளித்துள்ளார்.
இந்த நாட்டில் செய்யப்படும் பல குற்றங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அரசியல் செல்வாக்கு இல்லாமல் அத்தகைய நபர்கள் தொடர்பாக சட்ட முடிவுகளை எடுக்க பாதுகாப்பு துறைக்கு தற்போது அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.