முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அழைக்கப்பட்டது.

வழக்கு அழைக்கப்பட்டபோது, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. அவர் சூம் தொழில்நுட்பத்தினூடாக வழக்கில் முன்னிலையாகியிருந்தார்.