கதிர்காமம் சென்று திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் வீதியை விட்டு விலகி விபத்து….!

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்ளை மட்டக்களப்பு ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேருந்து கிரான்குளத்தில் விபத்தி சிக்கிய நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பேருந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது