“ஸரிகமபா” சபேசனின் விநாயகபுரம் வீடு தேடிச் சென்று வாழ்த்திய திருக்கோவில் தெரிவான தவிசாளர் சசிகுமார் அணியினர் ! திருக்கோவில் சுற்று வட்டத்தில் பதாதை!
( வி.ரி. சகாதேவராஜா)
சீதமிழ் “ஸரிகமபா” சீசன் 5 க்கு தெரிவான அம்பாறை பாடகர் சு. சபேசனின் விநாயகபுரம் வீடு தேடிச் சென்ற திருக்கோவில் பிரதேச சபையின் வருங்கால தவிசாளர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமாரின் பிரதிநிதிகள் சபேசனின் பெற்றோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
கூடவே தவிசாளர் வாழ்த்தும் போது தெரிவித்த உதவியும் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வு இன்று (26) திங்கட்கிழமை இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதான மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் சபேசன் தொடர்பான பதாதையையும் பறக்கவிட்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த இளம் பாடகர் சுகிர்தராஜா சபேசன் இந்திய மண்ணில் ZEE TAMIL தொலைக்காட்சில் இடம்பெறும் சரிகமபா சீஸன் 5 இற்கான பாடல் நிகழ்ச்சியில் தேர்வாகி சுற்றுக்கு தெரிவாகி சாதனை படைத்தமை தெரிந்ததே.
வரலாற்றில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சீதமிழ் ஸரிகமபா நிகழ்வில் பாடுவதற்கு தெரிவான முதல் பாடகர் சபேசன் என்பது பெருமைக்குரியது.






