கொழும்பு மாநகரசபை யாருக்கு? அனுரவுக்கு ஆதரவளித்த தமிழர் அணி

கொழும்பு மாநகரசபைக்கு தெரிவான பல சுயாதீன குழு உறுப்பினர்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிர்வாகத்தை அமைக்கத் தேவையான 59 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையை விட குறைவாகவே, தேசிய மக்கள் சக்திக்கான உறுப்பினர் எண்ணிக்கை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025 மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகரசபையின் 117 இடங்களில் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் மாநகரசபையில் மிகப்பெரிய தனிக் கட்சியாக உருவெடுத்தது.

நன்றி -A7TV