சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா
( வி.ரி.சகாதேவராஜி)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ணபிள்ளை பிரியதர்ஷன் சர்மாவிற்கு சிவாச்சாரிய மங்கள நன்நீராட்டு விழா இடம் பெற்றது.
சிவாச்சாரியார்கள் முன்னிலையில் சிவாச்சாரிய பட்டம் பெற்ற சிவஸ்ரீ பிரியதர்ஷன் சர்மா இல்லாள் மேகலா சகிதம் கலந்துகொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார்.
காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் அனைத்து குருமார்களுடனும் ஆலய நிர்வாகத்துடனும் மிகவும் சிறப்பாக இந் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.











