கர்ப்ப காலத்தின் பிரசவ வலியை அடையாளம் காண முடியுமா?

''

கர்ப்ப காலத்தின் இரண்டாம் முப்பருவ முடிவு வரை கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி எப்படியிருக்குமோ என்கிற பயத்தில் கர்ப்பிணிகளின் மனம் தவிக்கும். 7ம் மாதத்தைக் கடந்துவிட்டாலோ அவர்களது பயம் வேறு மாதிரி மாறிவிடும்.சுகப்பிரசவமாகுமா, சுகப்பிரசவ வலியைத் தாங்கிக்கொள்ள முடியுமா என்றெல்லாம் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடும். அடிக்கடி ஷாக் அடித்தது போல ஏற்படுகிற வலி நிஜமான வலியா, பொய் வலியா எனத் தெரியாமல் கலங்குவார்கள். குறைப்பிரசவமாகி விடுமோ என மிரள்வார்கள்.கர்ப்பிணிகளின் உண்மையான பிரசவ […]

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல், 200 பேர் பலி

''

வடக்கு செனாய் பகுதியில் பிர் அல்அபேத்தில் அல்ரவுடாக் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்தனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மக்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவித்து உள்ளது. நடத்தப்பட்ட தாக்குதலில் 75 பேர் காயம் அடைந்து உள்ளனர் […]

ஊழல், மோசடிகளுக்கு எதிராக பதவிகளை கைவிட்டு மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னேடுப்பேன்; ஜனாதிபதி

''

ஊழல், மோசடிகளுக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்ளும்போது தமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், சகல பதவிகளையும் கைவிட்டு, மக்களுடன் இணைந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளுக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, தமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். நிக்கவரட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தவறிழைத்த சுதந்திரக் […]

ஆரம்பமானது கூட்டமைப்பின் தீவிர பரப்புரை: ஆரம்பித்து வைக்கின்றார் சம்பந்தன்!

''

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்டவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் இன்று முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர பரப்புரையை ஆரம்பிக்கின்றது. கொழும்பிலிருந்து நேற்று திருகோணமலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இன்று அங்கு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்தும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இரா.சம்பந்தனின் இந்தக் கலந்துரையாடல் நாளை […]

75 ரூபாவாக தேங்காய்க்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!

''

ஒரு தேங்காய்க்கு 75 ரூபா என்ற அடிப்படையில் கட்டுப்பாட்டு விலை ஒன்றை நிர்ணயிப்பதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்தக் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படலாம் என்று வாழ்க்கைச் செலவு குழு தெரிவித்துள்ளது. தேங்காய் ஒன்று தற்போது 100 ரூபா முதல் 110 ரூபா வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காயின் அளவுக்கு ஏற்ப அதன் விலை சில பிரதேசங்களில் மாறுபட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதிகூடிய வறுமையான ஐந்து மாவட்டங்கள், வடகிழக்கிலயே உள்ளது!

''

(துறையூர் தாஸன்) இலங்கையில் அதிகூடிய வறுமையான ஐந்து மாவட்டங்கள்,வடகிழக்கிலயே உள்ளது. அவ்வரிசையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் முறையே வறுமையான மாவட்டங்களாகவுள்ளது. மூன்று தசாப்த அசாதரண நிலையின் பின்பு அரசாங்கம் முறைசார் நிதி நிறுவனங்களுடன் வறுமையை ஒழிக்க பல்வேறு கடன்திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் இவ் ஐந்து மாவட்டங்களிலும் வறுமை அதிகரித்தே காணப்படுகின்றது என, இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு கடன்திட்ட ஆலோசகர் ஸ்ரீபத்மநாதன் தெரிவித்தார். இலங்கை மக்கள் வங்கி […]

சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன்

''

ரொபர்ட் முகாபே பதவி விலயதை அடுத்து சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் மனங்காக்வா இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற நிகழ்வில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. கடந்த 37 வருடங்களாக ஆட்சியிலிருந்த ரொபர்ட் முகாபே அண்மையில் பதவி விலகியதை அடுத்து துணை ஜனாதிபதியாக இருந்த எமர்சன் பதவியேற்றார். ஷோனு பி.எப் கட்சியைச் சார்ந்த துணை ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததன் […]

இலங்கை அணி 205 ஓட்டங்களுக்குள் சுருண்டது

''

இலங்கை – இந்தியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. இலங்கை – இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று ஆரம்பமானது. இன்றைய 2வது போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. […]

காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் ஒஸ்கர் பிஸ்டோரியஸ்கு 13 ஆண்டுகள் சிறை

''

காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் தென்னாபிரிக்காவை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரியசுக்கு 13 ஆண்டு 5 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஒஸ்கர் பிஸ்டோரியஸ்(29), கடந்த 2013ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார். இதுகுறித்து […]

கோத்தாபயவின் கைது தடுத்து நிறுத்தப்பட்டதா?

''

முன்னால் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறை மா அதிபர் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தி, டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் கோத்தாபய ராஜபக்சவை, உடனடியாக கைது செய்வதற்கு, சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளார். இந்த நிலையிலேயே, […]