1987க்குமுன்பிருந்த பிரிப்புபோன்று கல்முனையை மூன்றாகப்பிரிப்பதற்கு நாம் உடன்படோம் ! ஹென்றிமகேந்திரன் தெரிவிப்பு!

''

(காரைதீவு  நிருபர் சகா) சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேசசபையை வழங்குவதை நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் மிகுதிப்பரப்பை மூன்றாகப்பிரிக்கவேண்டுமானால் 1987க்குமுன்பிருந்த பிரிப்புப்போன்று பிரிப்பதற்கு நாம் ஒருபோதும் உடன்படமாட்டோம். இவ்வாறு நேற்றுமுன்தினம் கல்முனை உள்ளுராட்சிசபை விவகாரம் தொடர்பாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர்முஸ்தபா கூட்டியகூட்டம் தொடர்பாக அதில் கலந்துகொண்ட ரெலோ கட்சியின் உபதலைவரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றிமகேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: கல்முனை மாநகரசபை பிராந்தியத்தை நான்காகப்பிரித்தல் என்ற விடயத்தில் […]

கல்முனை மாநகரசபை பிரிப்பு தொடர்பில் தமிழ்,முஸ்லிம் தரப்புக்கள் நிபந்தனைகளுடன் இணக்கம்!

''

(காரைதீவு நிருபர் சகா) கல்முனை மாநகரசபைக் குட்பட்ட பிரதேசத்தில் ‘ நான்கு உள்ளூராட்சி சபைகளை’ உருவாக்கி இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில்நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி மாகாண சபைகள். அமைச்சில் உயர்மட்ட கூட்டமொன்று இடம்பெற்றது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஷர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இக் குறிப்பிடப்படும் இவ்வுயர் மட்டக்கூட் டத்தில் ‘கல்முனை மாநகரசபை பிரதேசத் தின் பிரிப்பு’ தொடர்பில் கல்முனை சாய்ந்தமருது விவகாரங்கள் பலவும் நன்கு அலசி ஆராயப்பட்டு […]

யாழில் திடீரென ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள்!

''

யாழ். குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த அடைமழை காரணமாக புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக புவியியல் பிரிவு பேராசிரியர்களை மேற்கோள் காட்டி, இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அடைமழைக்கு முந்திய காலப்பகுதி மற்றும் பிந்திய காலப்பகுதியில் கடல் பகுதியில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த சில தினங்களில் யாழ்.குடாவை சூழவுள்ள கடற்பரப்பில் மாற்றம் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

கால்நடை மருத்துவ அதிகாரி பதவிக்கு ஆட்சேர்க்க விண்ணப்பம்!

''

(காரைதீவு  நிருபர் சகா) இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும்  சுகாதாரசேவையில் தரம்3 பதவியில் காணப்படும் நிலவும் 112  வெற்றிடங்களை நிரப்புவதற்கான  விண்ணப்பத்தை  அரசசேவைஆணைக்குழு கோரியுள்ளது. இதற்கு கால்நடை மருத்துவ விஞ்ஞானப்பட்டதாரிகள்  விண்ணப்பிக்கமுடியும். விண்ணப்ப முடிவுத்திகதி 05.12.2017 ஆகும். 110வீத விண்ணப்பதாரிகள் இதற்காக நடாத்தப்படும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு திறமை அடிப்படையில் இப்பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என கிராமிய பொருளாதாரம் பற்றி  அமைச்சின் செயலாளர் எஸ்.சேனநாயக்க தெரிவித்தார். விண்ணப்பப்படிவங்கள் யாவும் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு […]

முகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துங்க!

''

நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். இன்றைய காலகட்டத்தில், வெயிலினால் சருமம் கருமையாகிவிடுகிறது. இந்த கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யலாம். அது எப்படி […]

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி!

''

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனேஷியாவில் கடற்கரையை நெருங்கி வரும் அதிகளவிலான திமிங்கலங்கள்!

''

இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருகிறது. இந்தோனேஷியாவில் அதிகளவில் திமிங்கலங்கள் கடற்கரை நெருங்கி வருவதாகவும், மேலும் மலேசியா பினாங்கு கடற்கரை மீனவர்கள் வலையில் வழக்கத்திற்கு மாறாக பல டன் மீன்கள் கடலில் சிறு பகுதியிலேயே கிடைப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இவை கடலில் ஏதோ ஒரு இயற்கை பேரிடருக்கான எச்சரிக்கையாக இருக்கலாம், மேலும் இலங்கையில் கடல் உள்வாங்கி இருப்பதாக கூறுகின்றனர். இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களாக வதந்தி என்று […]

காலியில் ஊரடங்குச்சட்டம் அமுல் : நடந்ததென்ன ?

''

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 9 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலி மாவட்டத்தின் குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களில் நேற்று உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு […]

கடைசியில ‘ஜோ’வையும் கெட்ட வார்த்தை பேச வைச்சிட்டீங்களே பாலா… கொந்தளிக்கும் தாய்மார்கள்!

''

நடிகை ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும் என்று பெண்கள் சம்பந்தப்பட்ட படமாகவே நடித்து அனைத்து இல்லத்தரசிகளின் மனதில் நிரந்தர இடம்பிடித்திருந்தார். அதையெல்லாம் சுக்குநூறாக்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ள நாச்சியார் பட டீசர்… ஆம் இப்படத்தில் ஜோதிகா ‘தே… பயலே’ என்ற கெட்ட வார்த்தையை உச்சரித்துள்ளார். குடும்பப் பெண்ணாக இருந்த ஜோதிகாவையே இப்படி கெட்ட வார்த்தை பேச வைத்துவிட்டாரே என்று இயக்குனர் பாலாவின் மேல் கடுப்பில் உள்ளனர் நெட்டிசன்கள்… பெண்களின் முன்னேற்றத்திற்கான […]

பிரித்தானியாவில் நடுவானில் ஹெலிகொப்டர்-விமானம் மோதி விபத்து! நால்வர் பலி

''

பிரித்தானியாவில் நடுவானில் சிறிய ரக விமானமும், ஹெலிகொப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவின் பக்கிங்காம்ஷையர் அருகே உள்ள (Waddesdon) இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் பொலிஸார் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தில் விமானி மட்டும் இருந்ததாகவும், ஹெலிகொப்டரில் மூன்று பேர் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து உள்ளூர் நேரப்படி பகல் 12 […]