திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதம் நேரடியாக அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவரது ஒழுக்கக்கேடான நடத்தை ஒன்று தொடர்பாக விசாரணையை ஆரம்பத்துள்ள நீதிச் சேவை ஆணைக்குழு அவரின் விளக்கத்தைப் கோரி பெற்றதன் பின்னர் அவரைச் சேவையில் இருந்து இடைநிறுத்தியுள்ளது.

அவரது இடத்துக்குத் திருகோணமலை பிரதம நீதிவான் பயஸ் ரஸாக் பதில் கடமையாற்றுவார் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கை இதுவரை விசாரித்து வந்தவர் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

tamilwin