எமது உரிமை மீட்க ஒன்றிணைவோம்

நிருவாக அத்துமீறலுக்கும் , அடிப்படை உரிமை பறிப்புக்கும் எதிராக கல்முனை வடக்கு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக அமைதி வழியில் கடந்த மூன்று மாதங்களாக போராடி வருகின்றனர்.

நாளை 24 ஆம் திகதி 90 நாட்கள். நாளைய தினம் அனைவரையும் காலை 8.00 மணிக்கு பெருந்திரளாக ஒன்று கூடி எமது கோரிக்கையை வலுவாக வெளிப்படுத்த அனைவருக்கும் கல்முனை வடக்கு அனைத்து சிவில் சமூகம் அழைப்புவிடுத்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக உரிமைகள் மீதும் எமது மக்கள் மீதும் தொடர்ச்சியாக இழைக்கப்படுகின்ற அநீதிகள் அடக்குமுறைகளுக்கு எதிராக வீதியில் இறங்கி மூன்று மாதங்கள் கடந்து போராடி வருகிறோம். இருந்த போதிலும் இதுவரை அரசு உரிய தீர்வினை எமக்கு வழங்காது ஏமாற்றி வருவதனை கண்டித்து எதிர்வரும் 24/6/2024 காலை 8 மணிக்கு எமது கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக ஒன்றுதிரண்டு மாபெரும் எதிர்ப்பொன்றை வெளிப்படுத்துவோம்.

எனவே கல்முனை மண் மீது பற்றுடையவர்களே! எமது உரிமைகள் எம் கண்ணெதிரேயே மறுக்கப்படுவது தெரிந்திருந்தும் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திராமல் எம் உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரண்டிடுவோம்.

இது எமது எதிர்கால சந்ததியின் நிரந்தர நிம்மதிக்கான போராட்டம் என்பதை உணர்ந்து
கல்முனை வடக்கு பிரதேசத்தின் அனைத்து பொதுமக்களும்,கிராம மட்ட அமைப்புகளும்,அரச உத்தியோகத்தர்களும்,பாடசாலை மாணவர்களும் அனைவரும் கலந்து கொள்வதோடு வர்த்தகர்கள் தங்களின் வியாபார நிலையங்களையும் மூடி போராட்டத்திற்கு வலு சேர்ப்போம்.

காலம் 24.06.2024
நேரம் காலை 08.00 மணி

அனைத்து சிவில் சமுகம்
கல்முனை வடக்