இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம்

பாறுக் ஷிஹான்

இரு பாடசாலை மாணவிகள் காணாமல் சென்ற சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் 14 மற்றும் 16 வயது மதிக்கத்தக்க இரு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு மாணவிகள் காணாமல் சென்றமை தொடர்பில் கடந்த 10 ஆந் திகதி கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப்  வழிநடத்தலில் பொலிஸ் குழு ஒன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.