மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் சுகுணனுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடந்த இரண்டு வருடங்கள் சேவையபற்றி , வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்ற வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களுக்கான கௌரவிப்பும், பிரியாவிடை நிகழ்வும் நேற்று (04.06.2024) சிறப்பாக இடம் பெற்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகராக கடமையாற்றி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமைபுரியும், வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் இந் நிகழ்வு, அலுவலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் சிறப்பாக இடம் பெற்றது.

இந் நிகழ்வில் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ,திருமதி சுகுணன் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள், வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.