நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் உகந்தை மலை முருகன் ஆலய வளாகத்தில் சிரமதானம் – 2004

பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு வருடா வருடம் கதிர்காம்” உகந்தை முருகன் ஆலயங்களின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு பாதயாத்திரை செல்வோரின் நன்மை கருதி செய்து வருகின்ற சிரமதான நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. கடந்த மே 23 , 24 ஆகிய இரண்டு தினங்களும் இச் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.


லாகுகல பிரதேச செயலாளர் என். நவநீதராஜா அவர்களது அனுமதியுடன் பெரிய நீலாவணை கிராமத்திலிருந்து 30 பேர் கொண்ட நெக்ஸ்ட் ரெப் உறுப்பினர்களுடன்,கிராம மக்கள் சிலரும் இப் பணியில் இணைந்திருந்தனர்.

உகந்தமலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராமன் குருக்கள் அவர்களது ஆசியுடன் ஆரம்பமான இச்சிரமதானம் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. NEXT STEP சமூக அமைப்பின் தலைவர் என். சௌவியதாசன் தலமையில் நடைபெற்ற இச் சிரமதான நிகழ்வுகளில் ஒய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் கண.வரதராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.இன் நிகழ்வுக்கான பிரதான நிதி அனுசரணை மலேசியா நாட்டில் இருந்து NEXT STEP ன் ஆயூள்கால உறுப்பினரும்,ஆலோசகருமான வரதராஜன் றோகான் வழங்கியிருந்தார்.