நாடாளுமன்றம் கலைக்கப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவை என்றால் நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் உண்டு.

எனினும், ஒன்றிரண்டு வாரங்களில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த உரிய கால நிர்ணயங்கள் இல்லை என்ற போதிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்த கால வரையறை உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றின் முன்னிலையில் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.