முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு
உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அணி
திரண்டு 15 ஆவது வருடத்தில் கண்ணீர்விட்டு அழுதவாறு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.


வடக்குஇ கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின்
ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர்
காலை 10.30 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றியதைத் தொடர்ந்துஇ ஏனையவர்
களும் சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


இதன்போதுஇ முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வெளியிடப்பட்டுஇ முள்ளி வாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ஆகப் பிந்திய – மிக மோசமான
இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர்
தாயகத்தில் மாத்திரமல்லாது, பூமிப்பந்தெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி –
சிதறி வாழும் தேசங்களிலும் இடம் பெற்றது.

இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச்சபை உயரதிகாரியானசர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard) இறுதிப் போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த அஞ்சலி நிகழ்வு, இன்று (18.05.2024) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இடம்பெற்றுள்ளது.அக்னெஸ் கலமார்ட் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதை சர்வதேசத்துக்கு கூறுவதே எங்களின் முதன்மையான நோக்கம்.

அதற்குரிய விசாரணைகளை நடாத்துவதற்கான படிநிலைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.