வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை!

வட்ஸ்அப் ( WhatsApp) செயலியில் இணையவசதி இல்லாமல், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதியை மெட்டா (Meta) நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

வட்ஸ்அப் அதன் தளத்தை “All in One“ சேவைகளுக்கான மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தை அண்மை நாட்களில் மெட்டா நிறுவனம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

இந்த திட்டத்தின் மற்றுமொரு அம்சமாக இணையவசதியின்றி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய அம்சம்

அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வட்ஸ்அப் செயலி, தற்போது இணையம் இல்லாமல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் ஷேர் இட் (Share it) மற்றும் நியர் பை ஷேர் (Near By Share) போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்ப முடியும்.

அந்த வகையில், தற்போது வட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை வழங்குகிறது. அத்துடன், ஆவணங்களை விரைவாக, பாதுகாப்பாக அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும் எனவும், இந்த அம்சத்தை செயல்படுத்த வட்ஸ்அப் பயனர்கள் வட்ஸ்அப் சிஸ்டம் பயில்ஸ் (WhatsApp System Files), படங்களை அணுகல் (Photo Gallery) போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த அம்சம் தற்போது சோதிக்கப்பட்டு வரும் நிலையில், இது விரைவில் அனைத்து வட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

You missed