மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி DR. இரா .முரளீஸ்வரன் அவர்களுக்கு பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் வாழ்த்துக்கள்.

(பிரபா)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக ஒரு தசாப்த காலத்திற்கும்(2013 – 2023)மேலாக கடமையாற்றி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியில் முன்னின்று செயல்பட்டதோடு, கல்முனை மக்களின் ஏகோபித்த நன்மதிப்பையும் பெற்ற வைத்திய கலாநிதி, இரா. முரளீஸ்வரன் அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராகவும், அதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும், நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் 100 வருடங்களை தாண்டிய வைத்தியசாலையாக கருதப்படும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, மதிப்புக்குரிய பணிப்பாளர் Dr.இரா. முரளீஸ்வரன் வருவதற்கு முன்னர் திட்டமிட்டு பல அரசியல் காய்நகர்த்தல், சூழ்ச்சிகள் காரணமாக வைத்தியசாலையில் வளங்கள் சூறையாடப்பட்டு வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு,வந்ததை மறுக்க முடியாது.

இவ்வாறான நிலையில் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்கள் வைத்தியசாலையை பொறுப்பேற்று தனது நிர்வாக திறமையையும், தூர நோக்கு சிந்தனையும், பழமை வாய்ந்த வைத்தியசாலையின் சேவையை மக்கள் மத்தியில் விரிபுபடுத்தும் நோக்குடன் ஆற்றல் மிக்கவராக செயற்பட்டு, அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த வைத்தியசாலையாக உயர்த்தியதன் பெருமை வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன். அவர்களையே சாரும்.

கல்முனை மக்களுக்கு இன்று இல்லாமல் போனது ஒரு பேரிழப்பாகும் என்று சொன்னால் அது மிகையாகாது. இருந்தாலும் கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் என்ற நிலையில் இருந்து அவர் தொடர்ந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு தனது அளப்பரிய பணியை தொடர்ந்து செய்ய வேண்டும். என்றும் நாம் கல்முனை மக்கள் சார்பாக கேட்டு நிற்பதோடு,அவருக்கு கிடைத்த உயர் பதவிக்காக வாழ்த்துக்களையும் பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பு தெரிவிக்கின்றது.

You missed