கல்முனை மக்களுக்கெதிரான அநீதி ‘ போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது..
நேற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ள குமுறலை மெழுகு திரியில் ஒளியேற்றி வெளிப்படுததியிருந்தனர்.
அரசு இனியும் மௌனிக்குமா? தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சிக்குமா?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிரான அதிகார பயங்கரவாதத்தை கண்டித்து அனைத்து சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் அமைதிப்போராட்டம் இன்று (30) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

இதில் பெருமளவான பொதுமக்கள் மதகுருக்கள் அரசியல் பிரமுகர்கள் பங்குபற்றி கல்முனை வடக்கு பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கைக்கு தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஐந்தாவது நாளான நேற்று மாலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மதகுருக்கள் பஙகுபற்றி தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மெழுகுதிரியிலி ஒளியேற்றி வெளிப்படுத்தியிருந்தனர்.

கல்முனை இருதயநாதர் ஆலய பெரிய வெள்ளி பூசை ஆரதனையுடன் மதப்பெரியவர்களும் பக்தர்களும் பங்குபற்றியும் இருந்தனர்.

You missed