நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்!

நற்பிட்டிமுனையில் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் ஸ்ரீ நகுலேசுவரர் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 29.03. 2024 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 08.04.2024 திங்கட்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு விசேட அபிஷேகப் பூசையுடன் திருக்கொடியேற்றம் இடம்பெற்றது

இந்த உற்சவ காலத்தில் தினமும் காலை ஒன்பது மணிக்கு ஸ்நபன அபிஷேக பூசையுடன் மாலை 5 மணிக்கு தம்ப அபிஷேகம்இ விசேட பூசைகள் என்பன இடம்பெறும்.

04.04.2024 வியாழக்கிழமை மாம்பழத் திருவிழாவும் 05.04.2024 வெள்ளிக்கிழமை திருவேட்டைத் திருவிழா என்பனவும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.