கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் போராட்டம் ; அலுவலக ஊழியர்களும் இணைவு

    கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் நான்காவது நாளாக  ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் மாலை கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களும் தங்கள் கடமை முடிந்ததும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.


     அரச சேவையை பெறும் தங்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இனவாத அதிகார அத்துமீறலுக்கு அரசு இடமளிக்ககூடாது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும்     இனவாத அதிகார , அரசியல்வாதிகளுக்கும் தங்கள் கண்டனங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.   

 கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால்  பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்

 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன.

 பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அரச அதிகாரங்களை பெற்று மக்களுக்கான அரச சேவையை பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கும்  இப் பிரதேச மக்கள்  (25.03.2024) அமைதிப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இன்று (28) நான்காவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. பெருமளவான பொது மக்கள் பங்குபற்றி வருகின்றனர். 

அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?