மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் மட். அம்பாறையில் வெளியிடப்பட்ட அறிவுரை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா அரியநேந்திரன் வெளியிட்ட அறிக்கை

மார்ச்,12, இயக்கம் எனும் பெயரில் நேற்று (12/03/2024) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஊடக சந்திப்பு மூலம் தேர்தல்களில் வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் எப்படி இருக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட அறிவுரைகள் தொடர்பாக .

ஏன் மார்ச் 12, இயக்கம் என பெயரிட்டார்களோ தெரியாது.
மே,18,
கார்த்திகை,27,
என பல நினைவுகளை நடத்தும் தமிழ்த்தேசிய அரசியலில் இந்த மார்ச் 12, இயக்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில் தேர்தல் வேட்பாளர் ஒருவர் ஊழல் அற்ற, குற்றமற்ற, ஒழுக்க சீர்கேடுகள் அற்ற நேர்மையான ஒருவராக வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற கருத்து பொருத்தமானது பாராட்டக்கூடியது❗️

ஆனால் இனத்துவ அடையாளத்தை அடியோடு நீக்கவேண்டும் என்பதே மார்ச் 12 நோக்கம் என சொல்லப்படுகிறது இது தவறானது,!

ஏனெனில் இலங்கையில் தமிழ்பேசும் இனம் கடந்த 1948, ல் இருந்து புறக்கணிக்கப்பட்டு அடிமைகளாக வாழ்வதை கருத்தில் கொண்டுதான் தந்தை செல்வா இன அடையாளம் கொண்ட “இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியை” (இனத்துவமான கட்சியை) ஆரம்பித்தார்.

அந்த கட்சியால் முன்எடுத்த அகிம்சைப்போராட்டம், ஒப்பந்தம், மாநாடுகள், தேர்தல்கள் அனைத்தும் இனத்துவ அடையாளமாகவே கடந்த 30 வருடங்களாக முன்எடுக்கப்பட்டது.

அதற்கான தீர்வு சிங்கள தலைவர்கள் தட்டிக்கழித்தமையால்தான் (கிடையாமையால்) பின்னர் 1976, மே,14, ல் வட்டுக்கோட்டை்தீர்மானம் எடுக்கப்பட்டதும்,ஆயுதப்போர் நடத்தப்பட்டதும் அது எல்லாம் 2009,மே,18, வரை (32வருடங்கள்)நடைபெற்று முள்ளிவாய்க்காலல் மௌனிக்கப்கப்பட்டு அதனூடாக (15,வருடங்களாக) இராஜதந்திர செயல்பாடுகளை இன்று வரையும் இனவிடுதலைக்கான அரசியலாக வடகிழக்கில் பல தமிழ்த்தேசிய கட்சிகள், புலம்பெயர் உறவுகள், முன்எடுத்துவருவதை காணலாம்.

இனம், மொழி. நிலம், கலைபண்பாடு, பாதுகாப்பு, இவைகளை கொண்ட ஒரு செயலாக்கமே “தமிழ்தேசியம்” என்ற சொல் இது இனத்துவத்திற்கான ஒரு சொல்தான்.

இனத்துவ அரசியலை வடகிழக்கில் தவிர்த்து அரசியல் செய்ய முடியாது, வடக்கு கிழக்கு தமிழினம் தனித்துவமான சுயநிரணய உரிமைக்காக போராடிய இனம் அந்த இனத்துவ அரசியல் தமிழ்த்தேசிய அரசியலாகவே முன்னகர்த்த வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து.

உரிமைக்கான அரசியல் செய்யும் தமிழ்தேசிய கட்சிகள் இனத்துவ அடையாளங்களை விட்டு “இலங்கையர்” என்ற அடையாளத்துடன் அரசியலை முன்எடுக்க முடியாது.

வேண்டுமானால் இந்த மார்ச் 12, இயக்கமானது இனத்துவ அடையாளங்கள் தேவை என்ற நோக்கில் கருத்துக்களை மாற்ற வேண்டும் அதை வலியுறுத்தி வடகிழக்கில் பரப்புரை செய்வது பொருத்தம் என நினைக்கிறேன்.

தமிழினப்பற்றும்,தாய்மொழிப்பற்றும், தாயநிலப்பற்றும், தமிழ்தேசிய அரசியலுக்கு தேவையான அடிப்படை கொள்கை,
இவைகளை இல்லாமல் செய்து (நீக்கி) வடகிழக்கில் அரசியல் செய்வது சாத்தியமில்லை.

முக்கியமான ஒன்று நாம்”இலங்கையர்” என்று வாழ்ந்தால் சம உரிமை எமக்கு கிடைத்திருக்கவேண்டும்!
நாம் தமிழர் என்பதை மறந்து அரசியல் செய்ய முடியாது

இது எனது தனிப்பட்ட கருத்து சிலருக்கு வேறு சிந்தனைகள் கருத்துகள் இருக்கலாம்.!

நன்றி

-பா.அரியநேத்திரன்-
12/03/2024