உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாக தெரிவு!

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 2024.02.23 திகதி நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் செ. கலையரசன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிருவா தெரிவு இடம் பெற்றதுடன் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி பௌதீக அபிவிருத்தி இணை பாடவிதான அபிவிருத்தி விடயங்களும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், பாடசாலைக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை விருத்தி செய்யும் செயற்பாடுகள் தொடர்பாகவும் திட்டமிடப்பட்டன.

அண்மையில் இடம் பெற்ற தேசிய ரீதியான விளையாட்டு போட்டியில் பங்கு பற்றி இரண்டு , இரண்டாம் இடங்களையும் ஒரு மூன்றாம் இடத்தையும் பெற்ற பாடசாலையின் பழைய மாணவனான ரியாஸ் இக் கூட்டத்தின் போது கௌரவிக்கப்பட்டார்

புதிய நிருவாக சபை விபரம்

தலைவர் : செ. கலையரசன் (கல்லூரி அதிபர்)

செயலாளர் – எஸ். ஜெயராசா
உப தலைவர் – A. M.ரியாஸ்
உப செயலாளர் எஸ். அருள்ராஜா
பொருளாளர் N. ரங்கராஜன்
கணக்காய்வாளர் S. நாகேந்திரன்

நிருவாக சபை உறுப்பினர்கள்
A. L. M ஜெளபர்
Mis. K. சங்கரலிங்கம்
K. உருத்திரமூர்த்தி
M. பவிராஜ்
Dr. N. ரமேஷ்
J. R. ஜீவகடாட்சம்
V. சரணியா

You missed