தந்தை செல்வாவுடன் தமிழ்தேசிய அரசியலில் கால்பதித்து, தலைவர் பிரபாகரன் காலத்திலும் தமிழ்தேசிய அரசியலை முன்எடுத்த மூத்த அரசியல் ஆளுமை தமிழ்த்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கூறியது மட்டுமல்ல எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ்தேசிய கட்சிகளை ஒன்றினைத்து ஒற்றுமையாக பயனிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அனுபவம்,ஆளுமை,அது தந்தை செல்வாவுடனும், தலைவர் பிரபாகரனுடனும் இணைந்து தமிழ்த்தேசிய அரசியல் பணியை செய்த ஒரேயொரு தலைவர் 91, அகவை கொண்ட இரா.சம்பந்தன் ஐயா மட்டுமே..!

அவரின் ஆசி தற்போதய தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறிதரனுக்கு கிடைத்தது பெரும் பாக்கியம்.
-பா.அரியநேத்திரன்