பெரியநீலாவணை பிரபா

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் பாரிய வாகன விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த dsi டயர் கம்பனி வொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதுடன் மற்றும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உட்பட்டுள்ளார். இது தொடர்பான மேலும் விசாரணைகளை களுவாஞ்சி குடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.