இலங்கை ஈழத் தமிழர்களை நேசித்த விஜயகாந் அவர்களுக்கு நினைவு வணக்கம் செலுததும் நிகழ்வு காரைதீவில் இடம் பெற்றது.

இந்தியா திரைப்பட நடிகர் சிறந்த அரசியல்வாதி விடுதலைப்போராட்டத்தை நேசித்தவரும் ஈழத்தமிழருக்காகவும் குரல் கொடுத்தவருமான அமரர் கெப்டன் வியஜகாந் அவர்களுக்கு அம்பாறை காரைதீவு மண்ணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.

காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெசிறில் தலைமையில் அஞ்சலி வணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்,மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ,சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, தமிழ் உணர்வாளர்கள் என பலர் கலந்து கொண்டு மரணித்த விஜயகாந்த அவர்களுக்கு மலரஞ்சலி,தீபச்சடர் வணக்க அஞ்சலி செலுத்தினர்.