அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய 2023 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை 

பாறுக் ஷிஹான்

அம்பாறை  தலைமையக  பொலிஸ் நிலையத்தின்  இவ்வாண்டிற்கான இறுதி சம்பிரதாயபூர்வமான   பரிசோதனை நிகழ்வு பொலிஸ் நிலைய உள்ளக  மைதானத்தில் மழை மற்றும் வெயில் மத்தியில்  இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வானது  அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் -1  எஸ்.பி.எச்.செனவிரட்ன  மேற்பார்வையில்  அம்பாறை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  எச்.எம்.ஏ.கே.ஹேரத்   தலைமையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு   பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.அதன் பின்னர்  வாகனப் பேரணிகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில்   உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்  பொலிஸ் பரிசோதகர்கள்  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

மேலும் இந்நிகழ்வில்   சவளக்கடை  சம்மாந்துறை  பெரியநீலாவணை  காரைதீவு  சாய்ந்தமருது  உட்பட   அம்பாறை மாவட்டத்தின் 23   பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்திருந்தமை குறிப்பித்தக்கது.