கட்டார் இடம்பெற்ற மரதன் ஓட்டபோட்டியில் இலங்கையர் சாதனை

கட்டாரில் அமைந்துள்ள ULTRA RUNNER நிறுவனத்தின் ஏற்பாட்டில் Qatar Sports for All Federation (QSFA) அனுசரணையில் கடந்த வெள்ளிக்கிழமை (15/12/2023) இடம்பெற்ற கட்டார் கிழக்கிலிருந்து மேற்குக்கான 90 Km Ultra மரதன் ஓட்டத்தில் (Qatar East to West 90 KM Ultramarathon) இலங்கையைச்சேர்ந்த மீரஸா ரௌசான் (ACCA) சிறப்பாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இவ்வோட்டப்பந்தயத்தில் தனித்து ஓடுவதற்கான பட்டியலில் சுமார் 116 பேரும் குழுக்களாக (Relay) ஓடுவதற்கான பட்டியலில் சுமார் 783 பேரும் மொத்தமாக 899 பேரருமாக சுமார் 73 நாடுகளுக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் இலங்கயைப் பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாரை, இறக்காமம், வரிபத்தான்சேனையைச்சேர்ந்த மீராசா றெளசான் (ACCA) தனித்து ஓடுவதற்கான 40 வயதுக்கு மேற்பட்ட 28 பேர் கொண்ட பட்டியலில் கலந்து கொண்டு முழுமையாக 90 KM ஐயும் 13.01.09 மணித்தியாலங்களில் ஓடி தன் இலக்கை நிறைவு செய்துள்ளார்.

அத்தோடு, தனது தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் மேலதிகமாக 10km யும் நிறைவு செய்து மொத்தமாக 100km ஓடி தனது சாதனை இலக்கை அடைந்துள்ளார்.

வருடா வருடம் கட்டார் மண்ணில் நடைபெற்று வரும் மிகப்பெரும் ஓட்ட நிகழ்வில் (The biggest running event in Doha) இலங்கையைச்சேர்ந்த ஒருவர் பங்குபற்றியிருப்பது இது இரண்டாவது தடவை.

2021 இலும் இவர் குறித்த சாதனையை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

100 km இலக்கை எட்டுவதென்பது சாதாரணமான விடயமல்ல.

இலங்கையர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

ஆக்கம்
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி)

நன்றி -கத்தார் தமிழ் ரேடியோ