மட்டக்களப்பில்  மாவீரர் நினைவேந்தலில் பங்குபற்றிவர்களுக்கு பொய் தெரிவித்து வரவழைத்து வாக்குமூலம் பெறும் பொலிசாரால் மக்கள்  பீதியில் —

((கனகராசா சரவணன்) )

மட்டக்களப்பு தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலில் பங்கேற்றிய வர்களின் மோட்டர்சைக்கிள் இலக்கத்தை வைத்து பெயர் முகவரியை பெற்று பொய் தெரிவித்து ஊடகவியலாளர் உட்பட நான்குபேரை நேற்று வெள்ளிக்கிழமை (8) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பொலிசார் நினைவேந்தலில் பங்கேற்றது தொடர்பாக வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

கடந்த 27ம் திகதி கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தலில பங்கேற்பதற்காக  மோட்டர்சைக்கிளில் சென்று பங்கேற்றுவிட்டு வீடுதிரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை வாழைச்சேனை பொலிசார்  ஊடகவியலாளர் பிரதீபன் உட்பட 4 பேருக்கு கையடக்க தொலைபேசி ஊடாக மோட்டர்சைக்கிள் பிரச்சனை தொடர்பாக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு சென்று மோட்டர்சைக்கிள் பிரச்சனை தொடர்பக போக்குவரத்து பொலிசார் வருமாறு கோரிய நிலையில்  இல்லை நாங்கள் அழைத்தது மாவீரர் நினைவேந்தலில் பங்கேற்றியது தொடர்பாக வாக்கு மூலங்களை பெறுவதற்காக வரவழைத்துள்ள தாகவும் தெரிவித்து வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.

குறித்த நபர்கள் மாவீரார் துயிலும் இல்லத்திற்கு மோட்டர்சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு நினைவேந்தலில் பங்கேற்றி நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களின் இலக்கங்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் எழுதி எடுத்துக் கொண்டு அதனை மோட்டர் போக்குவரத்து திணைக்களத்தற்கு அனுப்பி அந்த மோட்டர்சைக்கிளின் உரிமையாளரின் பெயர் முகவரியை பெற்று அதனை கொண்டு அவர்களை தொடர்பு கொண்டு பொய்யான பிரச்சனைகளை தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்துளனர்.

இவ்வாறு பொலிசார் மாவீரர் நினைவேந்தல் முடிவுற்று இருவாரங்கள் சென்ற பின்பும் தொடர்ச்சியாக நினைவேந்தலில் பங்கேற்றியவர்களை பொய் தெரிவித்து வரவழைத்து பொலிசார் அச்சுறுத்தில் ஈடுபட்டுவருகின்ற இந்த செயற்பாட்டையடுத்து மக்கள் பீதியடைந்துள்ளனர்..