பணிப்பாளர் சபை உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் அறூஸ் நியமனம்!

அபு அலா –

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் விஷேட அறிவுறுத்தலுக்கமைவாக, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான
என்.மதிவண்ணனினால் இவருக்கான நியமனக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையின் அபிவிருத்திக்காக பல்வேறு பணிகளை மிக நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ்
மட்டுப்படுத்தப்பட்ட அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டது மிகப்பொறுத்தமானதாகும் என்று பல்வேறு அமைப்புக்களும், அட்டாளைச்சேனை பிரதேச மக்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருவதுடன் வாழ்த்துக்களையும்
தெரிவித்து வருகின்றனர்.

இந்த இடைக்கால புதிய பணிப்பாளர் சபைக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான பீ.ரீ.ஆதம்பாவா மற்றும் ஐ.எம்.நியாஸ் ஆகியோரும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் அவரின் நியமனக் கடிதத்தை
அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ்.எல்.முனவ்வரிடம் இன்று (04) கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்
தவிசாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.றமீஸ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.கியாஸ்தீன், ஆர்.கே.எஸ். ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.