உலகத் தமிழ் மக்கள் தமக்காக இன்னுயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்த உணர்வுடன் தயாராகின்றார்கள்!

தமிழினத்தின் உரிமைக்காகப் போராடி இன்னுயிர்களை இழந்த நாயகர்களின் – மாவீரர் தினமான இன்று (27.11.2023) நினைவுகூருவதற்குத் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழகம் உட்பட தமிழ் மக்கள் வாழும் ஏனை
ய நாடுகளிலும் பேரெழுச்சியுடன் தயாராகி வருகின்றனர்.

மாவீரர் துயிலும் இல்லங்கள், நினைவுத் தூபிகள், விசேட இடங்களில் மாவீரர் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவீரர் துயிலும் இல்லங்கள் சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்படுவதுடன் இன்று (27)மாலை 6.05 மணிக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மாவீர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

You missed