ஆசிரியர், அதிபர் பிரச்சினைகள் தொடர்பில் கல்வியமைச்சருடன் கலந்துரையாடல்

கலைஞர்.ஏஓ.அனல்

ஆசிரியர் அதிபர் சம்பளம் மற்றும் பாடசாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் ஆசிரியர் அதிபர்கள் ஒன்றியத்துடன் கலந்துரையாடல் ஒன்று இன்று (31) மாலை இடம்பெற்றது.

கல்வி அமைச்சருடனான இக்கலந்துரையாடலில் இதவடிவம் தொடர்பான 31/2023 ஆம் இலக்க சுற்றறிக்கை ,ஆசிரியர் லீவு தொடர்பான 37/2023 ஆம் இலக்கச் சுற்றறிக்கை ஆகியவற்றால் ஆசிரியர்களுக்கு உள்ளாகும் பாதிப்பு தொடர்பாக தொழில் சங்கங்கள் எடுத்துரைத்ததை அடுத்து இந்த இரண்டு சுற்றறிக்கைகளையும் திருத்தங்களுக்கு உட்படுத்தி தற்காலிகமாக கல்வி அமைச்சர் இடைநிறுத்தி உள்ளார்.