கல்முனை பிராந்தியத்தில் முதன்முறையாக நாளை (1) காவேரியின் ஏற்பாட்டில் விஞ்ஞான முகாம்!

பெரியநீலாவணை S. அதுர்ஷன்-

கல்முனை பிராந்தியத்தில் முதன் முறையாக நடத்தப்படும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விஞ்ஞான முகாம் இடம் பெறவுள்ளது.

பெரிய நீலாவணை காவேரி கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், காவேரி விளையாட்டு கழக அனுசரணையுடன் நடைபெறும் இந்த விஞ்ஞான முகாமில் மட்/ பட்டிருப்பு வலய ஆரம்ப பாடசாலை மாணவர்களும், கல்முனை வலய பாடசாலை மாணவர்களும் கலந்து பயன் பெறவுள்ளனர்.

பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இதற்கான ஒத்துழைப்புகளை வழங்கி உள்ளனர்.

பெரிய நீலாவணை கமு/ சரஸ்வதி வித்யாலயத்தில் இன் நிகழ்வு எதிர்வரும் 01 – 10 – 2023 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. புலமை பரிசில் பரீட்சையில் இடம் பெறுகின்ற 34 செயற்திட்டங்களையும் நேரடியாக செய்முறை ஊடாக மாணவர்கள் செய்து காட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.