நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறையில் ஒரு தமிழ் மாணவி

நிந்தவூரில் முதன் முறையாக வைத்தியத் துறைக்குத் தெரிவான தமிழ் மாணவியான குணசேகரம் ஜனுசிகாவை அம்பாரை மாவட்ட கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தவராசா கலையரசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு தாமோதரம் பிரதீவன் ஆகியோர் நேரில் சென்று பாராட்டி வாழ்த்தி பொன்னாடை போர்த்து மாலையும் பதக்கமும் அணிவித்து நினைவுப் பரிசும் பரிசுப் பொதியும் வழங்கி வைத்தனர் இவர்களோடு நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் நிந்தவூர் பிரதேச இளைஞர் அமைப்பு உறுப்பினர்களும் மாணவியின் பெற்றோரும் கலந்துகொண்டனர்

இவர் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் அதி விசேட சித்தி 09 A பெற்றிருந்தவார் என்பதும் குறிப்பிடத்தக்கது

You missed