கல்முனையில் கலைஞன் க.குலேந்திரனின் “மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் – வரலாற்றுக்குள்ளிவர்கள்” நூல் வெளியீடு!

-/அரவி வேதநாயகம்

கலைஞன் க.குலேந்திரனின் “மறைக்கப்பட்டதும் மறக்கப்பட்டதும் – வரலாற்றுக்குள்ளிவர்கள்” வரலாற்றுநோக்கு நூல் வெளியீடு நேற்று (02) இடம்பெற்றது.

கலைமாமணி கா.சந்திரலிங்கம் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசியுரையை அருட்கவியரசு விஸ்வப்பிரம்ம வை.ஈ.எஸ்.காந்தன் குருக்கள் வழங்கியிருந்தார்.

கல்முனை வடக்கு கலாசார பேரவையால் வெளியிடப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் கலந்துகொண்டு உரையாற்றியாற்றிதுடன் முதல் பிரதியையும் கலாபூசணம் கா.சந்திரலிங்கம் அவர்களுக்கு வழங்கி வெளியிட்டுவைத்தார்.

இவ்வெளியீட்டு விழாவின் நூல் அறிமுக உரையை ஓய்வுநிலை அதிபர் வீ.பிரபாகரன் நிகழ்த்தியதுடன் நூல் வெளியீட்டு உரையை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதிப்பதிவாளர் சஞ்சீவி சிவகுமார் நிகழ்த்த நூல் பற்றிய சிறப்புரையை ஓய்வுநிலை ஆசிரிய நிலைய முகாமையாளர் கி.செல்வராசா நிகழ்த்தினார்.

வன்னிமையின் சிறப்புகள் மற்றும் நூலாசியரியர் கே.குலேந்திரனுக்கு வன்னிமை செல்லையாவுடன் இருந்த தொடர்புகளால் தான் அறிந்த வன்னிமை தொடர்பான விடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் க.குலேந்திரன் எதிர்கால சந்ததிக்கு வன்னிமை தொடர்பில் எடுத்தியம்பும் ஆரம்பநிலை நூலாக இதனை ஆக்கியுள்ளார்.

சதா.ரகுவரன் (பிரதேச செயலகம், கல்முனை வடக்கு) தொகுத்து வழங்கிய இந்நூல் வெளியீட்டு விழாவில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ரீ.பிரபாகரன், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வை கல்முனை நெற் ஊடக வலையமைப்பு தனது முகப்புத்தக பக்கத்தில் பகுதியளவில் நேரலையாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.