ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் உக்ரேன் ரஷ;ய போர் தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடாத்த, மேற்கத்திய நாடுகளுக்கும், இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தோனேஷியா, எகிப்து, மெக்சிகோ, சிலி மற்றும் சாம்பியா உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சவூதி அரேபியாவில் நடக்கவிருக்கின்ற இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள், இந்தப் பேச்சுவார்த்தைகள் உக்ரைனுக்கு நன்மை பயக்க கூடியதாகவும் மேலும் அமைதியான ஒரு நிலைமையை உருதிப்படுத்த சர்வதேச ஆதரவை பெற்றுத்தரும் எனவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.