குருநாதன் உட்பட தமிழ் மகன் ஒவ்வொருவரும் இந் நிகழ்வை புறக்கணிப்பு செய்ய வேண்டும்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் வலியுறுத்தல்

கல்முனையில் வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இடத்தில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களின் வாக்காளர் பதிவு குடும்ப பதிவு அனைத்தும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுள் அடங்கி இருக்க அந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.TJ அதிசயராஜ் அவர்களை புறக்கணித்து நடக்கும் இந் நிகழ்வினை முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன் உட்பட அனைத்து தமிழ் மகன்களும் புறக்கணிக்க வேண்டும்.

பிரதம அதிதியாக கலந்து கொள்ள உள்ள மேலதிக அரசாங்க அதிபருக்கு இந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டதும் அதில் இந்த விடயம் தவிர்க்கப்பட்டது தெரிந்தும் தெரியாதது போல் இருந்தாரா ? என சந்தேகம் எழுகின்றது.

கல்முனை தமிழ் மக்களின் மனதில் வெந்த புண்ணில் வேலைப் பாச்சும் செயலாக இதனை நாம் பார்க்கின்றோம்.

குறித்த நிகழ்வானது அரச நிகழ்வா? தனியார் நிகழ்வா ? என்பதற்கு அப்பால் எம் மண்ணில் நடக்கும் நிகழ்வினை புறக்கணிக்காமல் செயல்பட்டால் அங்கு மக்களின் பல குழப்பங்களை ஊட்ட அரச உத்தியோகத்தர்கள் இணைந்து செயல்படுகின்றனரா என சந்தேகம் எழும் இது சமூகத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தும் ஆகவே இதில் இருந்து ஒவ்வொரு தமிழ் மகனும் எமது கல்முனை வாழ்மக்களின் மனநிலையினை கருத்தில் கொண்டு இதனை புறக்கணிக்க வேண்டும் என்பதோடு இந்த நிகழ்வு ஒழுங்கமைப்பு எமது கட்சியின் வாலிப முன்னணி சார்பிலும் வலுத்த கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.