ஒன்பதாவது தடவையும் தங்கப்பதக்கத்தை வென்ற கல்முனை பாலுராஜ்

கொழும்பு சுகததாசவில் கடந்த மூன்று தினங்கள் இடம்பெற்ற 47வது தேசிய கராத்தே போட்டியில் இம்முறையும் தங்கப்பதக்கத்தினை கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் சுவீகரித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கும் கல்முனை பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துள்ள எஸ் பாலுராஜ் 2012 -முதல் (2020-2023)வரையில் நடை பெற்ற தேசிய காராத்தே சுற்றுப்போட்டியில் தொடர்ச்சியாக தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் வருடமும் தங்கப்பதக்கத்தினை பெற்று தொடர்ச்சியான முறையில் 8 வருடங்களாக ஒன்பது பதக்கத்தினை தனதாக்கியதோடு . கராட்டி பிரிவில் தனதும் கிழக்கு மாகாணத்தினதும் பெயரை முதல் இடத்தில் தக்க வைத்துள்ளார்.

மூன்று தடவைகள் best player எனும் பட்டத்தினையும் சுவீகரித்துள்ளார்.