பாறுக் ஷிஹான்

 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மாநாட்டு அறையில் இன்று (20) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல்.எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு திட்டமிடல் கூட்டம் அரச சார்பற்ற பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது  

                                                                                           பிராந்திய தொற்று நோய்த் தடுப்பியலாளர் வைத்தியர் எம்.ஏ.சீ.எம் பஸால் அவர்களினால் எற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ. வாஜித் அவர்களும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர் அவர்களும் சுகாதார வைத்திய அதிகாரிகளும் பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டதுடன் ADT நிறுவனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர்  ரகு பாலசிங்கம்  பிராந்திய முகாமையாளர் செல்வரத்தினம் ஜெபசுதன் செயற்றிட்ட முகாமையாளர் ரகந்தா அபேயக்கோன் செயற்றிட்ட உத்தியோகத்தர் என். வேனுகோபன் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர் 

கல்முனை பிராந்தியத்தில் தொழுநோயை கண்டறிவததற்கான பிரசோதனைகளை விரிவுபடுத்தி தொழுநோயை பூரணமாக கட்டுப்படுத்துவதற்குமான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இக்கலந்துரையாடலின் போது பணிப்பாளர் அவர்கள் வலியுறுத்தியதுடன் இதற்காக அரசு சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பை மேலும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்

 இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

You missed