பாஸ்போட் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம் : புதிய முறை ஆரம்பம் – விபரம் உள்ளே

-தொகுப்பு -வேதநாயகம் தபேந்திரன்-

01.; நாடு முழுவதுமுள்ள 51 பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.

 1. திணைக்களத்தின் இணையத் தளத்தின் https://www.immigration.gov.lk இணையவழி முறையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளல் “ எனும் இணைப்பில் பிரவேசித்து உரிய தெரிவை மேற்கொள்ள வேண்டும்.

03..தெரிவில் உங்களது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளடக்குதல் வேண்டும். உள்ளடக்கிய பின்னர் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக் கூடிய OTP கடவுச் சொல் – Password ஐ உள்ளடக்குதல் வேண்டும்.

 1. கடவுச் சொல்லை உள்ளடக்கிய பின்னர் கிடைக்கப்பெறும் அறிவுறுத்தலுக்கமைய தகவல்களைப் பதிவு செய்தல் வேண்டும்.
 2. பாஸ்போட் பெறுவதற்குச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை ஏற்கனவே ஸ்கான் செய்து தயாராக வைத்திருக்க வேண்டும்.

5.1 முதல்முறையாகப் பாஸ்போட் பெறும் ஆண் அல்லது திருமணமாகாத பெண் ஒருவராயின்
பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி, தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையத்தில் புகைப்படம் எடுத்துப் பதியப்பட்ட பிரதி, அவ்வாறு புகைப்படம் எடுக்காது விடின் விண்ணப்பிக்கும் பிரதேச செயலகத்திலேயே எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

5.2 முதல் முறையாகப் பாஸ்போட் எடுக்க விண்ணப்பிக்கும் திருமணமான ஒரு பெண் ஆயின் திருமணப் பதிவுச் சான்றிதழின் மூலப்பிரதியுடன் மேலே குறிப்பிட்ட ஆவணங்களை உள்ளடக்குதல் வேண்டும்.
சான்றிதழ்கள் தெளிவான பிரதிகளாக இருந்தால் போதுமானது. ஆறு மாத காலத்தினுள் எடுக்கப்பட்ட பிரதிகளாக இருத்தல் வேண்டும், ஆங்கில மொழி பெயர்ப்பு இருக்க வேண்டுமென்ற தேவை எதுவுமேயில்லை.

5..3 ஏற்கனவே பாஸ்போட் வைத்திருந்து அது காலாவதியாகி இருப்பவர்கள் அதில் புகைப்படம் உள்ள பக்கத்தை ஸ்கான் செய்து , மேலே கூறப்பட்டுள்ள ஆவணங்களையும் வைத்திருந்தால் போதுமானது.

 1. பாஸ்போட் பெறுவதற்குக் கைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்வதற்கு உரிய பிரதேச செயலகத்தின் அடையாள அட்டைப் பிரிவிற்கு எப்போது வரல் வேண்டுமென கைத்தொலைபேசிக்குக் குறும்செய்தி ஒன்று கிடைக்கும்.
 2. கைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்வதற்கு உரிய தினத்தில் உரிய பிரதேச செயலகத்திற்குச் செல்லும் போது விண்ணப்பதாரி தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்தல் கட்டாயமானது.

60 வயதுக்கு மேற்பட்டோரிடம் கை விரல் அடையாளங்கள் பெறப்பட மாட்டாது.

 1. பாஸ்போட்டுக்கான புகைப்படத்தை ஏற்கனவே எடுத்திருக்காத போது கைவிரல் அடையாளத்தை உறுதி செய்யும் பிரதேச செயலக அலுவலகத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
 2. தங்களிடம் செல்லுபடியற்ற கடவுச்சீட்டு இருப்பின் அதனைக் கைவில் அடையாளம் பதிவு செய்யும் பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். காலாவதி றப்பர் சீல் அடித்த பின்பாகத் திருப்பித் தருவார்கள்.
 3. அவசர தேவை கருதிக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தால் 03 நாள்களுக்குள் கூரியர் சேவை மூலமாக வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.
 4. பாஸ்போட் விண்ணப்பத்தை இணையவழியில் சமர்ப்பிக்க இயலாத தன்மை இருந்தால் புகைப்படம் எடுப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரூடியோவை நாடுதல் வேண்டும். அவர்கள் செய்து தருவார்கள்.
 5. கட்டணங்கள்.
  அவசரதேவை-மூன்று நாள்களுக்குள் பெறுவதற்கான கட்டணம் 15 000 ரூபா.
  பதின்னான்கு நாள்களுக்குள் பெறுவதற்கான கட்டணம் 5 000 ரூபா.
  கொடுப்பனவை வங்கி அட்டையின் மூலமாக அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையின் ஊடாகவும் செய்யலாம்.
  கொடுப்பனவு செய்யும் முறையாக வங்கியைத் தெரிவு செய்யுமிடத்து அந்தத் தெரிவைக் காட்டும் சிட்டையைத் தரவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொடுப்பனவைச் செய்யும் வங்கிக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.
 6. இணையவழியில் பாஸ்போட் பெறுவதற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியாத சந்தர்ப்பங்கள்
 • செல்லுபடியான பாஸ்போட் காணாமல் போயுள்ள சந்தர்ப்பத்தில்
 • 16 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கான விண்ணப்பம்
 • வேறு நாடு ஒன்றில் பிறந்த பிள்ளை 22 வயதுக்குப் பின்னர் முதன்முறையாகப் பாஸ்போட் பெற விண்ணப்பிக்கும் போது..
 • உத்தியோகபூர்வ ,ராஜதந்திர பாஸ்போட்டுக்கான விண்ணப்பங்கள்
 1. பாஸ்போட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
 • பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
 • தேசிய அடையாள அட்டை
 • புகைப்படத்தின் சிட்டை – பிரதேச செயலகத்திற்கு வருகை தருவதற்கு முன்பாக எடுத்த புகைப்படத்தின் சிட்டை
 • செல்லுபடியாகும் கடவுச் சீட்டின் உயிர்மானத் தரவுகள் உள்ளடக்கப்பட்ட பக்கத்தின் பிரதிகள்
 • திருமணத்தின் பின்னர் பெயரை மாற்றம் செய்வதாயின் திருமணப் பதிவுச்சான்றிதழ்
 • தொழிலை உள்ளடக்குவதாயின் அதற்குரிய சேவைச் சான்றிதழ்கள் மற்றும் கல்விச் சான்றிதழின் பிரதிகள்.
 • வெளிநாடு ஒன்றில் பிறந்த பிள்ளை எனில் குடியுரிமைச் சட்டத்தின் உரிய பிரிவின் கீழான பதிவுச் சான்றிதழ்
 • இரட்டைக் குடியுரிமை எனில் இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் மற்றும் குடியுரிமை பெற்றுள்ள மற்றைய நாட்டினது கடவுச் சீட்டினது உயிர்மானத் தரவுகள் அடங்கிய பக்கத்தின் பிரதி.

மதகுருமாருக்கு
சகல மதகுருமாருக்கு ஏற்புடைய அரசாங்க நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள குருத்துவத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் வருடியெடுக்கப்பட்ட பிரதி.

குறிப்பு- வழமை போல குடிவரவுக் குடியகல்வுத் திணைக்களத்தின் 05 அலுவலகங்கள் ஊடாகவும் விண்ணப்பித்துப் பெற முடியும்.

ஒரே நாள் சேவைக்குக் கட்டணம் 20 000 ரூபா.
சாதாரண சேவைக்கு 5000 ரூபா
வழமை போல் ஆவணங்களைச் சமர்ப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.

காணாமல் போன பாஸ்போட்டுக்கு பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதியைப் பெற்று உரிய தண்டப்பணம் 15000 ரூபா குடிவரவு திணைக்களத்திற்கு செலுத்துதல் வேண்டும்.

ஹொட்லைன் இல. 1962
தொடர்புத் தொலைபேசி இல. 0112101 500

தொகுப்பு -வேதநாயகம் தபேந்திரன்
2023 -06-15

You missed