பசுமையான நினைவுகளை மீட்டும் கவிதை –“தலைமுறை”—பாண்டியூர் இரா. நி. தாசன்

பசுமையான நினைவுகளை மீட்டும் கவிதை –தலைமுறை…… ?? – பாண்டியூர் இரா. நி. தாசன்

எங்கள் தலைமுறை மீண்டும் வராத ஒரு தலைமுறை…..

பள்ளிக்கு சென்றுவிட்டு நடந்தே வந்த தலைமுறை. ……
கூடிய விரைவில் தெருக்களில் விளையாடுவதற்காக வீட்டுப்பாடங்களைத் தானே செய்த தலைமுறை. ……

ஓய்வு நேரத்தை தெருக்களில் கழித்த தலைமுறை.

இருட்டினில் கண்ணாமூச்சி விளையாடிய தலைமுறை.

மண் பாயசம் செய்த தலைமுறை.
பளிங்கு குண்டுக்கற்களை சேகரித்த ஒரு தலைமுறை.

கைகளால் காகித பொம்மைகளை உருவாக்கும் தலைமுறை.

புகைப்படங்களையும், ஆல்பங்களையும், முத்திரைகளையும் சேகரித்த தலைமுறை.

வயதானவர்களை மதித்த தலைமுறை .

படுக்கைக்கு முன் சிரிக்கும் தலைமுறை,

ஆனால் நாம் இன்னும் விழித்திருக்கிறோம் என்பது பெற்றோர் அறியாத தலைமுறை. ! …

இளமையை அனுபவித்து வாழ்க்கையை வாழ்ந்த தலைமுறை….

பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், மொழியையும் பேணிக்காத்த தலைமுறை..

கடந்து போகும், மறைந்து போகும், அழிந்து போகும் தலைமுறை

துரதிஷ்டவசமாக திரும்பி வராத தலைமுறை..

  • பாண்டியூர் இரா. நி. தாசன்