நாட்டில் பரவி வரும் கொவிட் வைரஸின் தற்போதைய மாறுபாட்டை கண்டறியும் சோதனை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நாட்களில் பரவும் கோவிட் வகையை அடையாளம் காண்பது முக்கியம்.

கோவிட் ஓமிக்ரோன் XBB ஸ்ரெய்ன் நாட்டிற்குள் நுழைந்ததாக சந்தேகம் இருந்தாலும், அதை உறுதிப்படுத்த ஒரு திரிபு சோதனை செய்ய வேண்டும். கோவிட் 19 இன் XBB தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் கடந்தாண்டு பதிவாகியிருந்தனர்.

வைரஸின் அறிகுறிகள்

முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியம். ஏனெனில் இந்த வகை வைரஸ் கொடியது மற்றும் எளிதில் அடையாளம் காண முடியாது, மேலும் இந்த வைரஸ் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தாது.

இதன் முக்கிய அறிகுறிகள் மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, மேல் முதுகு வலி, நிமோனியா மற்றும் பசியின்மை போன்றவையாகும்.

இந்த வைரஸின் திரிபு நுரையீரலை நேரடியாக பாதிக்கிறது மற்றும் டெல்டா பிறழ்வை விட ஐந்து மடங்கு கடுமையான சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கையில் மிகவும் ஆபத்தான கோவிட் திரிபு பரவி வருகின்றதா என்பது குறித்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது நாட்டில் பரவி வரும் கோவிட் திரிபினை அடையாளம் காணும் நோக்கில் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

அதிகரிக்கும் கோவிட் பரவுகை

நாட்டில் அண்மைய நாட்களாக கோவிட் பரவுகை அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

கோவிட் ஒமிக்ரோன் எக்ஸ்.பி.பி. (Omicron XBB) திரிபு நாட்டில் பரவத் தொடங்கியுள்ளதாக வெளியிடப்படும் தகவல்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கலாநிதி ulla.

You missed