எந்தவொரு அரசியல் பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்த பின்னரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்சி முன்வைக்கும் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயார் என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்புக்காக பாடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.