சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பான நடவடிக்கை எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கு நீண்ட கால கடன்சலுகையை வழங்குவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய அறிவிப்பு எதிர்வரும் 20ம் திகதி வெளியாகவுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் தொடர்பான ஒப்பந்தம் எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.