தமிழர்களுடைய அரசியல் தீர்வை அங்கீகரிப்பதற்கு சிங்கள தேசம் தயாராக உள்ளதாக என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை இருள்சூழ்ந்த சுதந்திரம் என பிரகடனப்படுத்தி இலங்கை தமிழரசுக்கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவை சேனாதிராஜா இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார். தமிழ் தேசத்தின் விடுதலைக்கும் தமிழ் மக்களின் உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்கு இன்று போராடவேண்டிய நிலைங்கு சிங்கள தேசம் இன்று நிர்ப்பந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இராஜதந்திரமுறையில் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும் என்றும் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அத்தனை நடவடிக்கைகயையும் இந்தியா தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117