இலங்கையில் கோவிட் தொற்று பரவல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் பரவி வரும் கோவிட் திரிபானது இலங்கையில் பல மாதங்களாக காணப்படுவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணப்படும் திரிபு

சீனாவில் பெருமளவு மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கோவிட் திரிபுகள் இலங்கையிலும் உலகிலும் பல மாதங்களாக காணப்படுகின்றன.

சீனாவிலிருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்த வேளை இது உறுதியாகியுள்ளது என பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.